ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்று முன்னர் மாலைத்தீவுக்கு சென்றுள்ளார்.
மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாலைத்தீவுக்கு அரசு முறை விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
மாலைத்தீவு ஜனாதிபதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளார்.