பொரளை மயானத்திற்கு அருகில் இன்று (28) காலை பல வாகனங்கள் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மரங்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின், சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் 62 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து பேர் காயமடைந்து தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
விபத்தினால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் தற்போது சீர் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.