follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடு50,000 பட்டதாரிகளின் சேவை நிரந்தரம் : மாதாந்த கொடுப்பனவும் உயர்வு

50,000 பட்டதாரிகளின் சேவை நிரந்தரம் : மாதாந்த கொடுப்பனவும் உயர்வு

Published on

அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட 50,000 பட்டதாரிகளின் சேவை நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இவ்வாறு  பயிலுநர் பட்டதாரிகளின் சேவை நிரந்தரமாக்கப்பட்டுள்ளது என  உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

50,000 பேருக்கு அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட முதற் சந்தர்ப்பம் இதுவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிரந்தர நியமனத்துடன் அவர்களது வேதனம் 31,490 ஆக உயர்த்தப்படுவதுடன் ஏனைய கொடுப்பனவுகளுடன் அவர்களுக்கு மாதாந்தம் 41,490 ரூபா வழங்கப்படும்.

இந்த பட்டதாரி பயிலுனர்கள் இதுவரை மாகாண சபைகள், மாவட்ட செயலகம், பிரதேச செயலாளர் காரியாலயம், திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் அபிவிருத்தி அதிகாரியாக பயிற்சி பெற்று வந்துள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...