அமெரிக்காவின் முக்கிய பொருளாதார தீர்மானங்களை உள்ளடக்கிய Big Beautiful law பிரேரணையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற விழாவின்போது இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணையில் டொனால்ட் ட்ரம்ப்பினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரித்திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க பாதுகாப்புக்காக செலவீனங்களுக்காக 150 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி குறித்த பிரேரணையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
குடியேற்றம் மற்றும் சுங்க அமுலாக்கத்திற்காக 100 பில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரதிநிதிகள் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 218 வாக்குகளும் அதற்கு எதிராக 214 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.