follow the truth

follow the truth

July, 1, 2025
Homeவிளையாட்டுதவறை ஏற்றுக்கொண்டார் ஜோகெகவிச்

தவறை ஏற்றுக்கொண்டார் ஜோகெகவிச்

Published on

அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்பதற்கு தான் போலி தகவல்களை வழங்கியதாக முன்னணி டெனிஸ் வீரர் நொவேன் ஜோகெகவிச் ஏற்றுக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நொவேன் ஜோகெகவிச்சின் அவுஸ்திரேலிய விஜயம் குறித்து, போலியான சுற்றுலா தகவல்களை முன்வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

ஜோகெகவிச் அவுஸ்திரேலியாவிற்கு வருவதற்கு 14 நாட்களுக்கு முன்னர், சமர்பிக்கப்பட்ட ஆவணத்தில், அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த காலப் பகுதியில் அவர் ஸ்பெயின் மற்றும் சர்பியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றதாக கூறப்படும் படங்கள் சமூக வலைத்தயங்களில் பகிரப்பட்டு வந்தன.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய அதிகாரிகளினால் நடத்தப்பட்ட விசாரணைகளில், தான் போலி ஆவணம் சமர்பித்துள்ளமையை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பகிரங்க டெனிஸ் போட்டிகளில் பங்குப்பற்றுவதற்காக அவர் கடந்த 5ம் திகதி அவுஸ்திரேலியா நோக்கி பயணித்திருந்தார்.

கொவிட் தடுப்பூசி  செலுத்திக்கொள்ளாமையினால், அவரை அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்காதிருக்க அந்த நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘கேப்டன் கூல்’ வாசகத்தை வர்த்தக முத்திரை உரிமையை பெற்றார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் தோனி தனது புகழ்பெற்ற புனைப்பெயர், ரசிகர்கள் அன்பாக அழைக்கும் 'கேப்டன்...

டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு வெற்றி

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற...

பங்களாதேஷூக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை...