நாடாளுமன்றம் அமர்வுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக, நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளாா்.
கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுன்ற ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி,விசேட பொருட்கள் மற்றும் சேவை வரி மசோதாவின் இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறும்.