follow the truth

follow the truth

February, 18, 2025
Homeஉலகம்டோங்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

டோங்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Published on

டோங்கோவின் பங்காய்க்கு வடமேற்கில் 219 கிலோ மீற்றர் தொலைவில் 6.2 ரிச்டெர் அளவிலான நிலநடுக்கம் வியாழனன்று ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் 14.5 கிலோ மீற்றர் ஆழத்தில் பதிவானதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஜனவரி 15 அன்று, 170 க்கும் மேற்பட்ட தென் பசிபிக் தீவுகளை உள்ளடக்கிய ஓசியானியாவில் உள்ள ஒரு சிறிய நாடான டோங்கோ அருகே கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.

இந்த வெடிப்பினால் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை, ஹவாய் மற்றும் அலாஸ்காவின் பெரும்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இது 20 கிலோமீட்டர் உயரத்திற்கு பெரிய சாம்பல் மேகங்களை ஏற்படுத்தியது மற்றும் மிகவும் தொலைதூர பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை பாதித்தது.

அதேநேரம் டோங்கோவில் சுனாமி அலைகளையும் ஏற்படுத்தி பாதிப்படையச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சட்டவிரோதமாக தங்கியதாக அடுத்தடுத்து 2 விமானங்களில் இந்தியர்களை அனுப்பிய அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கியிருந்ததாக, இந்தியாவைச் சேர்ந்த 112 நபர்கள் மூன்றாம் கட்டமாக நேற்றிரவு( 16) திருப்பி அனுப்பப்பட்டனர். பஞ்சாபின்...

ஹமாஸ் நரக வேதனையை அனுபவிக்க நேரிடும் – எச்சரித்த இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் இடை யே கடும் போர் நடந்தது. காசாவில் இஸ்ரேல்...

டீப்சீக் செயலிக்கு தென் கொரியா தடை

சீனாவை சேர்ந்த செற்கை நுண்ணறிவு (AI) செயலியான டீப்சீக்-ஐ டவுன்லோட் செய்ய தென் கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. டீப்சீக்...