இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழல் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) 2025 தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (08) ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த பெஷாவர் ஸால்மி மற்றும் கராச்சி கிங்ஸ் இடையிலான பிஎஸ்எல் போட்டி, மைதானத்திற்கு அருகில் ட்ரோன் தாக்குதல் நடந்ததை அடுத்து ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை, ஐபிஎல் 2025 தொடரை ஒரு வாரத்திற்கு இடைநிறுத்துவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பிசிசிஐ) அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.