கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அத்துடன் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்துக்கு அமைய, கொட்டாஞ்சேனை மற்றும் பம்பலப்பிட்டி பொலிஸாரிடம் இருந்து இந்த விடயம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
பாடசாலைக்குள் இடம்பெறும் உடல், உள மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் அறியப்படுத்தாமை, பாடசாலையின் நற்பெயரை பாதுகாக்கும் நோக்கில் செயற்படுதல் போன்றவற்றால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது உடனடியாக பாடசாலையின் அதிபர் அல்லது பொறுப்பு வாய்ந்த தரப்பினர் அது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறியப்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.