இந்தியா-பாகிஸ்தான் மோதல் அதிகரித்து வருகின்றமை காரணமாக, பாகிஸ்தான் தனது வான்வெளியை தற்காலிகமாக முழுவதுமாக மூட தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் உள்ள 3 விமானப்படை தளங்களை குறிவைத்து இந்தியா இன்று தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது.
தங்கள் நாட்டு வான்பகுதியை பாகிஸ்தான் தற்காலிகமாக மூடியுள்ளது. வான் பரப்பில் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3.10 முதல் மதியம் 12 மணிவரை வான் எல்லை மூடப்படுவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.