கொட்டாஞ்சேனையில் மாணவியொருவர் உயிரிழந்த விவகாரத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் தொடர்பில் இன்றைய தினமும் பாராளுமன்றில் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இதன்போது பாராளுமன்றில் உரையாற்றிய முஜிபுர் ரஹ்மான், மாணவி கல்வி பயின்ற பாடசாலையின் அதிபர், உரிய விசாரணைகளை முன்னெடுக்காமல் சிறுமியை பாடசாலையில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அழுத்தம் பிரயோகித்துள்ளார் எனவும் பலருக்கு முன்பாக மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய தனியார் வகுப்பின் ஆசிரியருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் இடமாற்றம் மட்டும் போதுமானதல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த மாணவி தொடர்பான விவகாரம் நீதியான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி நாடாளுமன்றத்தில் வைத்து குறிப்பிட்டுள்ளார்.