காலி, பூஸ்ஸ, ரிலம்ப சந்தியில் புகையிரத கடவையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (01) காலை 10.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், வவுனியா நோக்கி பயணித்த புகையிரதத்துடன் முச்சக்கரவண்டி மோதியுள்ளது.
அதே பிரதேசத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் முச்சக்கரவண்டியில் பயணித்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.