follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1சைக்கிள் போக்குவரத்தை ஊக்குவிக்க அமைச்சரவை அனுமதி

சைக்கிள் போக்குவரத்தை ஊக்குவிக்க அமைச்சரவை அனுமதி

Published on

இலங்கையின் போக்குவரத்து கட்டமைப்புடன் மோட்டார் அல்லாத போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையில் தற்போது இயங்கு நிலையிலுள்ள வாகனங்கள் 05 மில்லியன்களுக்கு அதிகமாகக் காணப்படுவதுடன், அது 2000 ஆம் ஆண்டில் மூன்று மடங்கு அதிகரிப்பைக் காட்டுகின்றது.

குறிப்பாக முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் போன்ற தனியார் வாகனங்களின் இறக்குமதி அதிகரித்தமையே அதற்கான காரணமாக உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வருமானம் அதிகரிப்பு மற்றும் நிலவுகின்ற பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவதிலுள்ள சிரமங்களாலும் தனியார் மோட்டார் வாகனங்களின் பாவனை அதிகரித்துள்ளமையைக் காணக்கூடியதாகவுள்ளதுடன், தனியார் மோட்டார் வாகனப் பாவனை துரிதமாக அதிகரித்துள்ளமை, மோட்டார் அல்லாத போக்குவரத்து முறைகளின் பங்களிப்பு குறைவடைந்தமைக்குக் காரணமாக அமைந்துள்ளது.

மோட்டார் அல்லாத போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் வளிமண்டலம் மாசடைவது குறைக்கப்படுவதுடன், உடல் ஆரோக்கியம், வளியின் தரம், சுற்றடல், காலநிலை மாற்றங்கள் மற்றும் தனிநபர் நிதிநிலைமை போன்ற விடயங்களில் நேர்மய விளைவுகளை ஏற்படுத்தும்.

அதனால், பொருளாதார மற்றும் சுற்றாடல் ரீதியான நன்மைகளை அடைவதற்காக, மோட்டார் அல்லாத போக்குவரத்து முறைகளை நிலவுகின்ற போக்குவரத்துக் கட்டமைப்புடன் ஒருங்கிணைப்பது பொருத்தமாக அமையுமென கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர சமர்ப்பித்த விடயங்களை கருத்தில் கொண்டு ஏற்புடைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறைகமைய கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை உடன்பாடு வழங்கியுள்ளது.

• தற்போதுள்ள வீதிகளுக்குப் பொருத்தமான வகையில் சைக்கிள் பாதையை புள்ளடியிட்டு வேறாக்குதல் மற்றும் பாதசாரிகளுக்காக தற்போதுள்ள நடைபாதைகளை மேம்படுத்தல்.

• எதிர்வரும் காலங்களில் நிர்மாணிக்கப்படும் வீதிகளுக்கு சைக்கிள் மற்றும் நடைபாதைகளை உள்ளடக்குவதற்கான நடவடிக்கை எடுத்தல்.

• அரச அலுவலகர்களுக்க சைக்கிள்  பாவனையை ஊக்குவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.

• அலுவலகங்களில் சைக்கிள் பாவனையாளர்களுக்கு அவற்றைத் தரித்து வைப்பதற்கான இடங்கள் மற்றும் அவற்றின் அணுகலக்கான வசதிகளை ஏற்பாடு செய்தல்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான சட்டங்கள் அமுலாக்கப்படும்

வீதி விபத்துகளைக் குறைக்க கடுமையான விதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார். தற்போதுள்ள...

சட்டவிரோதமாக உர மோசடியில் ஈடுபட்ட 12 பேர் கைது

பொலன்னறுவையில் மோசடி உரவிற்பனையில் ஈடுபட்ட 12 பேர் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலன்னறுவை ஶ்ரீபுர பிரதேசத்தில் இந்தச்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் இன்று

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...