நாட்டிற்கு தேவையான இறக்குமதிகளை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் 1600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்ற போதிலும், நாட்டில் தற்போது 700 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாகவே உள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மக்கள் புலனாய்வு மையம் வலியுறுத்தியுள்ளது.
அதன் தலைவர் பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாட்டில் தற்போது அந்நிய செலாவணியில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.