மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
கம்பஹாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிதியமைச்சர், வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்தும் வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இருப்பதாக குறிப்பிட்டார்.
இதேவேளை, ஐஓசியின் எரிபொருள் விலையுடன் ஒப்பிடும் போது, சிபெட்கோ எரிபொருளின் விலை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அமைச்சர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக ஊடகவியலாளர்கள் கூறியபோது, அந்த நம்பிக்கையை தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.