மலேசியாவின் புதிய பிரதமராகிறார் இஸ்மாயில் சப்ரி

895

மலேசியாவின் 9-வது பிரதமராக இஸ்மாயில் சப்ரி யாக்கோப் (Ismail Sabri Yaakob) நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 17 மாதங்கள் பிரதமராக இருந்த முஹியித்தீன் யாசீன், தமது கூட்டணியிலேயே பெரும்பான்மை ஆதரவை இழந்ததால், கடந்த 16 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் அந்த கூட்டணியில் உள்ள ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு கட்சியின் தலைவர்களில் ஒருவரான இஸ்மாயில் சப்ரி யாக்கூபுக்கு 222 பாராளுமன்ற உறுப்பினர்களில் 114 பேரின் ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here