நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக நாளையும் (06) நாளை மறுதினமும் (07) பாராளுமன்றில் விசேட விவாதம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (05) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.