இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை மிக உன்னிப்பாக கண்காணித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது
சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாத இறுதியில் புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் வொசிங்கடனில் கலந்துரையாடல் நடத்த எதிர்பார்த்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி மசாஹிரோ நொசாகி தெரிவித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் அலி சப்ரி பதவியேற்று 24 மணித்தியாலங்களின் பின்னர் இன்று இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.