தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கொழும்பில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்காக இன்று முதல் மேலதிகமாக 200 பஸ்கள் சேவையில் ஈடுபடும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
இந்த 200 பஸ்கள் நாளாந்தம் இயக்கப்படும் சேவைகளுக்கு மேலதிகமாக இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாளையும் மேலதிகாக 200 பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.