follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் சமர்பிக்க தீர்மானம்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் சமர்பிக்க தீர்மானம்

Published on

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் விரைவில் சமர்பிக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.

நேற்றிரவு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்றக் குழுவின் அவசரக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

போதிய எண்ணிக்கையான பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் எதிர்வரும் பாராளுமன்ற வாரத்திற்குள் நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், அரசாங்கத்தின் மக்கள் விரோத வேலைத்திட்டத்திற்கு எதிராக கண்டியில் இருந்து கொழும்பு வரை பாரிய பாதயாத்திரை ஒன்றை ஏற்பாடு செய்வது தொடர்பில் நேற்றிரவு நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

24ஆம் திகதி கண்டியில் ஆரம்பமாகி மே 1ஆம் திகதி கொழும்பை சென்றடையும்.

மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பலம் கொடுப்பதே நடைபயணத்தின் நோக்கம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் சில வீதிகளுக்கு பூட்டு

15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத்...

சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரித்து வருவதால், வீதியில் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தும் போது...

கொழும்பில் 22 வெள்ள அபாய பகுதிகள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அபாய பகுதிகள் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. வடிகால் அமைப்புகளின்...