பிரான்ஸ் ஜனாதிபதியாக தொடர்ந்து இரண்டாவது முறையாக இம்மானுவேல் மேக்ராங் வெற்றி பெற்றுள்ளார் .
இத்தேர்தலில் இம்மானுவேல் மேக்ராங் எதிர்பார்க்கப்பட்டதற்கும் அதிகமாக 58.55 சதவீத வாக்குகளையும் லீ பென் 41.45 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.
தன்னுடைய வெற்றிக்குப் பிறகு ஈஃபிள் டவர் அருகே தன் ஆதரவாளர்களிடையே உரையாற்றிய மக்ரோங், தேர்தல் தற்போது முடிவடைந்துள்ளதாகவும், தான் “அனைவருக்குமான அதிபராக இருப்பேன்” எனவும் தெரிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தொடர்ந்து அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் இம்மானுவேல் மேக்ராங் ஆவார்.
இதேவேளை, பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் இம்மானுவேல் மேக்ரான் வெற்றிபெற்றதற்கு சில பகுதிகளில் போராட்டம் இடம் பெற்றுள்ளது.