க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று (23) நாடளாவிய ரீதியில் 3,844 நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு 517,496 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகவும் அவர்களில் 407,129 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 110,367 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் நாடளாவிய ரீதியில் 542 பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இன்று ஆரம்பமாகும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது