நாடு முழுவதிலும் சுமார் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோக சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்களின் துன்புறுத்தல்கள், தாக்குதல்கள், எரிபொருள் கொள்வனவு செய்ய பணமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் இவ்வாறு 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.