டீசல் இன்மையால் இன்றைய தினம் தனியார் பேருந்து சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படும் என விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் உறுதியளித்திருந்தார்.
துரதிஷ்டவசமாக மட்டுப்படுத்தப்பட்ட தரப்பினருக்கே இலங்கை போக்குவரத்து சபை எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் கிடைக்கப் பெற்றது.
இதன்காரணமாக உரிய வகையில் பேருந்து சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.