பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ஜப்பான் பிரதமர் அறிவிப்பு

1064

ஜப்பானில் எதிர்வரும் 29 அம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை எனவும் இராஜினாமா செய்யவுள்ளதாகவும் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா (Yoshihide Suga) அறிவித்துள்ளார்.

யோஷிஹிடே சுகாவின் ஆட்சி தொடர்பில் அதிருப்தி நிலவி வந்த நிலையில், அவர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே (Shinzo Abe) பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் யோஷிஹிடே சுகா பிரதமராக நியமிக்கப்பட்டார்.

கொவிட் தொற்று காரணமாக ஜப்பானில் டோக்கியோ உட்பட சில நகரங்களில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதை விடுத்து கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அந்நாட்டு பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here