எரிபொருள் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமெனில், டீசல் விலையை 25 ரூபா முதல் 30 ரூபா வரையில் குறைக்க வேண்டும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
இதேவேளை பெற்றோலின் விலை குறைந்த போதிலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அகில இலங்கை முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.