follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் : 51 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் : 51 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல்

Published on

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 51 பேரையும் எதிர்வரும் ஜூலை 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் இன்று காணொளி மூலம் உத்தரவிட்டார்.

கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர், ஸஹ்றான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின பேரில் காத்தான்குடியை சேர்ந்தவர்கள் ஸாரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 69 பேரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸார் வழக்கு தாக்குல் மேற்கொண்டனர். இவர்கள் அனைவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்னர்.

இதில் ஸாரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் ஆகியோரது வழக்குகள் நீதவான் நீதிமன்றில் இருந்து உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதுடன் 5 பேர் வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டதுடன் 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதை அடுத்து 51 பேர் தொடர்ந்தும் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுதாரபுரம், கேகாலை, பதுளை, திருகோணமலை போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது நாட்டில் பல்வேறு சிறைச்சாலைகளில் உள்ளவர்களை தற்போதைய நாட்டின் எரிபொருள் சூழ்நிலை காரணமாக அழைத்து வரப்படாத நிலையினை கருத்தில் கொண்டு காணொளி மூலமாக 51 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

LATEST NEWS

MORE ARTICLES

மேல் மாகாணத்தில் இன்று சுகாதார வேலைநிறுத்தம்

வைத்தியர்களுக்கான போக்குவரத்து மற்றும் கட்டுப்பாடற்ற கொடுப்பனவு அல்லது DAT கொடுப்பனவை தங்களுக்கும் 35,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரி, மாகாண...

இன்று தேசிய துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இன்று (21) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரச நிறுவனங்களிலும்...

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...