follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஇன்றைய வானிலை

இன்றைய வானிலை

Published on

வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலை காணப்படுவதாக வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்தப்பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை : புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...