follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஎஞ்சியுள்ள ஃபைஸர் தடுப்பூசி காலாவதியானதாக வெளியாகும் செய்தி பொய்யானது!

எஞ்சியுள்ள ஃபைஸர் தடுப்பூசி காலாவதியானதாக வெளியாகும் செய்தி பொய்யானது!

Published on

நாட்டில் தற்போது எஞ்சியுள்ள ஃபைஸர் தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டதாகவும், அவற்றை மீளவும் பயன்படுத்த முடியாது எனவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் தடுப்பூசி மையத்திற்கு பொறுப்பான பிரதம வைத்தியர் மஹிந்த விக்ரமாரச்சி தெரிவித்துள்ளார்.

பொரளை புனித லூக்கா தேவாலயத்தில் இன்று (12) ஆரம்பமான தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனமும் சுகாதார அமைச்சும் இணைந்து மேற்கொண்ட பரிசோதனைகளின் பின்னர் மேலும் மூன்று மாதங்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளுக்கு ஃபைஸர் தடுப்பூசிகளை பயன்படுத்த முடியும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பொரளை புனித லூக்கா தேவாலயத்தின் அருட்தந்தை கிருஷாந்த மென்டிஸின் வேண்டுகோளுக்கு இணங்க, இன்று (12) முதல் வார நாட்களில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அனைத்து தரப்பினருக்கும் மூன்றாவது மற்றும் நான்காவது தடுப்பூசியாக ஃபைஸர் தடுப்பூசி  வழங்கப்படுகிறது.

அத்துடன், 12 முதல் 20 வயது வரையான அனைவருக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் தடுப்பூசிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் சில வீதிகளுக்கு பூட்டு

15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத்...

சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரித்து வருவதால், வீதியில் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தும் போது...

கொழும்பில் 22 வெள்ள அபாய பகுதிகள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அபாய பகுதிகள் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. வடிகால் அமைப்புகளின்...