follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉள்நாடுதிருத்தப்பட்ட சேவைகளுக்கு வயதெல்லை பொருந்தாது!

திருத்தப்பட்ட சேவைகளுக்கு வயதெல்லை பொருந்தாது!

Published on

அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 60ஆக குறைக்கப்பட்ட போதிலும், கட்டாய ஓய்வு வயதெல்லை திருத்தப்பட்ட சேவைகளுக்கு  பொருந்தாது என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில், அமைச்சரவை அனுமதியுடன் சுற்றறிக்கை வெளியிடப்படும் என அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 6ஆம் திகதிய அரச நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம், அனைத்து அரச ஊழியர்களினதும் கட்டாய ஓய்வு வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டது.

அதற்கு முன்னர், சேவை அவசியத்தன்மை அடிப்படையில், சில விசேட சேவைகளுக்கு, கட்டாய ஓய்வு வயதெல்லை, ஓய்வூதிய யாப்பில் நிர்ணயிக்கப்பட்ட, கட்டாய ஓய்வு வயதெல்லை 60 வயதை விடவும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

புதிய இடைக்கால பாதீட்டில், அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 60 ஆக திருத்தப்பட்டது.

அது, அனைத்து அரச ஊழியர்களினதும் கட்டாய ஓய்வு வயதெல்லை, 65 ஆக நிர்ணயிக்கப்படுவதற்கு முன்னர், கட்டாய ஓய்வு வயதெல்லை திருத்தப்பட்ட சேவைகளுக்கு பொருந்தாதவாறு நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அனுமதியுடன் சுற்றறிக்கை அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...

அஸ்வெசும – ஜூலை 16 வரை மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம்

அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 16 திகதிவரை முன்வைக்க முடியுமென கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக...