சதோசவிற்கு வந்த வெள்ளப்பூண்டு மூன்றாம் தரப்புக்கு விற்பனை : 4 பேர் பணி நீக்கம்

632

சதொச விற்பனை நிலைய வலையமைப்புக்கு துறைமுக அதிகாரசபையினால் விநியோகிக்கப்பட்ட 54, 860 கிலோ வெள்ளைப்பூண்டு அடங்கிய கொள்கலன்கள் இரண்டை எவ்வித அனுமதியும் இன்றி மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் சதொச அதிகாரிகள் 4 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி குறித்த கொள்கலன்கள் இரண்டும், சதொச வர்த்தக நிலைய வலையமைப்புக்கு விநியோகிக்கப்பட்டிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here