follow the truth

follow the truth

May, 22, 2025
Homeஉள்நாடுமத்தள விமான நிலையத்திற்கு மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டம்!

மத்தள விமான நிலையத்திற்கு மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டம்!

Published on

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

வருங்கால முதலீட்டாளர் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் முதலீடு செய்யத் தயாராக இருந்தால் அரசாங்கம் பரிசீலிக்கும் என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் கொரோனா தொற்றுநோய் மற்றும் நாட்டில் பரவலான போராட்டங்கள் போன்ற பல காரணங்களால் விமானப் போக்குவரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இரத்மலானை மற்றும் பலாலி விமான நிலையங்களும் திட்டமிட்டபடி முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பலாலி விமான நிலையத்தில் பல விமான நிறுவனங்கள் தமது சேவைகளை இயக்குவதாக உறுதியளித்த போதிலும் ஒரு விமானம் கூட அங்கு தரையிறங்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏர் இந்தியாவும் தங்கள் சேவைகளை இயக்க ஒப்புக்கொண்டதாகவும்ஆனால் அதன் வார்த்தையைக் காப்பாற்றத் தவறிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாலைதீவு விமான சேவை நிறுவனத்துடன் இரத்மலானை விமான நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தோல்வியடைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவையும் இதுவரை 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தை பதிவு செய்துள்ளதாகவும் அதனை மறுசீரமைப்பதற்கான அமைச்சரவை பத்திரம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

49வீத பங்குகள் வருங்கால முதலீட்டாளருக்கு குத்தகைக்கு விடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கனுக்கு சொந்தமாக எந்த விமானமும் இல்லை என்றும் கடற்படையில் உள்ள 23 விமானங்களும் குத்தகைக்கு விடப்பட்டவை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவையை குத்தகைக்கு விடாவிட்டால், சுமார் 6,000 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்க நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல பகுதிகளில் நாளை 10 மணி நேர நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (22) காலை 8.30 முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய...

உச்சம் தொடும் தங்க விலை

இன்று தங்கத்தின் விலை 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர். அந்தவகையில்,...

மின் கட்டண திருத்தம் – நாளை முதல் பொதுமக்களின் கருத்து கோரல்

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப்...