follow the truth

follow the truth

May, 21, 2025
Homeஉள்நாடுநாளாந்த எரிவாயு தேவை குறைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவிப்பு

நாளாந்த எரிவாயு தேவை குறைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவிப்பு

Published on

தற்போது, நாளாந்த எரிவாயு தேவை குறைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை புதிய எரிவாயு சிலிண்டர்கள் உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இலங்கையில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்கு புதிய சிலிண்டர்களை ஓடர் (orders) செய்யும் லிட்ரோ கம்பனியின் செயற்திட்டமே இதற்குக் காரணம்.

நாடு எதிர்நோக்கும் டொலர் நெருக்கடிக்கு தீர்வாக லிட்ரோ நிறுவனம் அண்மையில் இந்த முறையை அறிமுகப்படுத்தியது.

இதன்படி, வெளிநாடுகளில் வசிக்கும் கணிசமான இலங்கையர்கள் டொலர்களை செலுத்தி புதிய சிலிண்டர்களை ஓடர் (orders) செய்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாளாந்த எரிவாயு தேவை சற்று குறைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுயள்ளார்.

மக்கள் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துவதே இதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கணேமுல்ல சஞ்சீவ கொலை – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான துப்பாக்கிதாரியை எதிர்வரும் ...

நாமலின் க்ரிஷ் வழக்கிற்கு திகதி குறிப்பு

கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாய் நிதியைப் பெற்று நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல்...

ரமித் ரம்புக்வெல்ல இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார். ஊழல்...