follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடுகண்டிக்கு புதிய சொகுசு கடுகதி ரயில் சேவை!

கண்டிக்கு புதிய சொகுசு கடுகதி ரயில் சேவை!

Published on

கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையில் விசேட சொகுசு கடுகதி புகையிரத சேவையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக, வெகுசன ஊடக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வெகுசன ஊடக அமைச்சில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ஒக்டோபர் 01ஆம் திகதி முதல், வார இறுதியில் இடம்பெறும் இப்புகையிரத சேவை அந்த வகையில் இச்சேவையானது,

  • மு.. 6.30 மணிக்கு கொழும்புகோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்டு மு.. 9.18 மணிக்கு கண்டியை சென்றடையவுள்ளது.
  • பி.. 4.50 மணிக்கு கண்டியில் இருந்து புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையவுள்ளது.

அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை கருத்திற் கொண்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இப்புதிய ரயில்கள் சேவையில் இணைக்கப்படவுள்ளதாக, அமைச்சர் தெரிவித்தார்.

முதல் வகுப்பு ஆசன கட்டணம் ரூ. 2,000, 2ஆம் வகுப்பு ஆசன கட்டணம் ரூ. 1,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கண்டி தலதா மாளிகை மற்றும் பேராதனை தாவரவியல் பூங்காவை பார்வையிடவும், கண்டி நகரை சுற்றி பார்க்க வருகை தரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகவும், இந்த புகையிரதம் பயனுள்ளதாக அமையுமென தெரிவித்த அமைச்சர், இந்த சேவை ஆடம்பரமான, நம்பகமான, பாதுகாப்பான சேவையை வழங்குமென சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, அநுராதபுரம் புனித யாத்திரை செல்லும் மக்களுக்காக கொழும்பு கோட்டையிலிருந்து அநுராதபுரத்திற்கான புதிய விசேட புகையிரத சேவையொன்று மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

யோஷித மற்றும் டெய்சி பாட்டிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு எதிரான வழக்கை...

யால தேசிய வனவிலங்கு பூங்காவில் மேலும் சில வலயங்களை திறக்க தீர்மானம்

யால தேசிய வனவிலங்கு பூங்காவில் மேலும் சில வலயங்களை சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பதற்கு சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின்...

தெமட்டகொடை ரயில் கடவையில் திருத்தப் பணி – வாகனப் போக்குவரத்து மட்டு

தெமட்டகொடை ரயில் கடவையில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர புனரமைப்பு பணிகள் காரணமாக, மே 24 ஆம் திகதி குறித்த வீதி...