ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க இராணுவம் முழுமையாக வெளியேறுவதற்கு சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 10 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.
ஆகஸ்ட் 29ஆம் திகதி நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஒரு மனிதாபிமான சேவை உதவியாளர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா மத்திய கட்டளையின் விசாரணை கண்டுபிடித்துள்ளது.
தாக்குதலில் பலியானவர்களில் ஏழு பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்காவின் இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. திடீரென தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால், அப்போது மக்களை மீட்கும் பணிகளும் அதிதீவிரமாக நடந்து கொண்டிருந்தது.
தலிபான்கள் திடீரென ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.