தேனீக்கள் கொட்டி இறந்த பென்குயின்கள்- அரிதினும் அரிய நிகழ்வு
தென் ஆபிரிக்க தலைநகர் கேப் டௌன் அருகே, பென்குயின்கள் தேனீக் கூட்டம் ஒன்றால் உயிரிழந்துள்ளன.
மொத்தம் 63 ஆப்பிரிக்கப் பென்குயின்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தென்னாப்பிரிக்காவில் உள்ள பறவை இன பாதுகாவலர்கள் தெரிவித்துள்ள்ளார்.
சிம்சன்ஸ்டவுன் எனும் ஊரில் உள்ள உயிரிழந்த நிலையில் காணப்பட்ட பென்குயின் உடலில் தேனீக்கள் கொட்டியதைத் தவிர வேறு எந்த காயமும் தென்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளன.
பென்குயின்களின் கண்களைச் சுற்றி தேனீக்கள் கொட்டி இருப்பது தெரியவந்துள்ளதாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த பென்குயின்களின் உடல்கள் காணப்பட்ட அதே இடத்திலேயே உயிரிழந்த சில தேனிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர் டேவிட் சுட்டிக்காட்டியுள்ளார்.