follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுசந்திர கிரகணம் இன்று

சந்திர கிரகணம் இன்று

Published on

2022ஆம் ஆண்டின் இறுதி சந்திர கிரகணத்தை இன்று பிற்பகல் காணலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பிரிவின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவு அறிவித்துள்ளது.

ஏனைய நாடுகளுக்கு இது முழு சந்திர கிரகணமாகத் தோன்றினாலும் இலங்கையில் பகுதி சந்திர கிரகணமாகவே இது காணப்படுவதாக பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

மதியம் 1:32 மணிக்கு சந்திர கிரகணம் நிகழ்கிறது என்றும் இதன் இறுதி பகுதியை பகுதி சந்திர கிரகணமாக பார்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்திரன் அடிவானத்திற்கு கீழே இருப்பதால் கிரகணத்தின் ஆரம்பம் தென்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று 5:48 மணிக்கு இலங்கைக்கு சந்திர உதயம் தெரியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 31 நிமிடங்கள் கிழக்கு அடிவானத்தைப் பார்த்தால் பகுதி சந்திர கிரகணத்தைக் காணலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

இ-பாஸ்போர்ட் முறை அடுத்த சில மாதங்களில்

இலங்கையில் இ-பாஸ்போர்ட் முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான்...

வெள்ளம் ஏற்படும் அபாயம்

எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி,...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய பிரதான வீதியை இன்று (17) இரவு 8 மணி முதல்...