லொஹான் ரத்வத்தே சிறைச்சாலை சம்பவம் : நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் குழு

970

நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் அமைச்சர் லொஹான் ரத்வத்தே சம்பந்தப்பட்ட சிறைச்சாலை சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு குழுவை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது

அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாக ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை நியமிக்க நீதி அமைச்சர் விவாதித்ததாக அழகப்பெரும கூறினார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் இரண்டு கைதிகளை கொலை செய்வதாக மிரட்டியதாக கூறப்பட்ட ரத்வத்தே கடந்த வாரம் தனது பதவியை இராஜினாமா செய்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here