follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடு"மக்கள் போராட்டங்களை ரணிலால் நிறுத்த முடியாது"

“மக்கள் போராட்டங்களை ரணிலால் நிறுத்த முடியாது”

Published on

“ரணில் மயான வழியாக இரவில் செல்லும் போது பயத்தைப் போக்க பாட்டுப் பாடும் மனிதனைப் போன்றவர்” என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்திருந்தார்.

மேலும் ரணில் வீரம் பற்றி பேசவில்லை, பயந்து பேசுகிறார் என்றும் அவர் ஊடக நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

“.. ரணில் விக்கிரமசிங்கவின் கதைகளை யார் பெரிதாக எடுத்துக் கொண்டாலும் ஜே.வி.பி. அதனை பெரிதாக அலட்டிக் கொள்ளாது. ரணில் விக்கிரமசிங்கவின் கதைகளைப் பற்றி ஜேவிபி கவலைப்படவில்லை. தனக்குக் கிடைத்த தகுயற்ற அதிகாரத்தால் வாயிற்காவலர் மன்னன் ஆனதைப் போல மக்கள்மீது அச்சுறுத்தல், அடாவடித்தனத்தை அடக்குவது போன்ற கதைகளுக்கு நாம் சிறிதும் அஞ்சவில்லை. ரணில் விக்கிரமசிங்க அண்மைய மக்கள் எழுச்சியின் மீது வெறுப்புடன் இருப்பதை நாம் அறிவோம். அந்த எழுச்சியால் அவர்களின் சகாக்கள் சவாலுக்கு ஆளாகியிருப்பதை நாம் அறிவோம். அந்தப் போராட்டம் எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது மக்கள் குழுவோ நடத்தும் ஒற்றைப் போராட்டம் அல்ல.

இதன் பின்னர் போராட்டம் நடத்த இடமளிக்க மாட்டோம், போராட்டங்கள் மூலம் ஆட்சியை மாற்ற இடமளிக்க மாட்டோம், அவசரகாலச் சட்டத்தை பிரயோகித்து இராணுவத்தை பயன்படுத்தி ஒடுக்குவோம் என ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். மக்களை ஒடுக்கிய ஒடுக்குமுறையாளரிடம் லைசென்ஸ் வாங்கிப் போராட வேண்டுமா? அடக்குமுறையாளர்களை விரட்ட உலக வீதிகளில் இறங்கிய மக்கள் அடக்குமுறையாளர்களிடம் அனுமதி பெறவில்லை.

அதேபோல, ஒடுக்குமுறையாளர்கள் பொதுப் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. ரணிலைப் போலவே கோட்டாபய ராஜபக்சவும் போராட்டங்களை நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். எந்தத் தளத்தில் இருந்தும் 69 இலட்சம் பேர் கோட்டாபயவுக்கு வாக்களித்தனர், அவர் இராணுவ அதிகாரியாகவும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் இருந்தார். அவருக்கு உதவியாக மூன்றில் இரண்டு பங்கு அரசு இருந்தது. அப்படியானால், மக்களால் நியமிக்கப்படாத ரணில் விக்கிரமசிங்கவால் மக்கள் போராட்டங்களை நிறுத்தவே முடியாது” என்றார்.

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க SJB உடன் இணைவு

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து...

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் குறித்து கம்மன்பில குற்றச்சாட்டு

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய...

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு வரி விதிக்க கோரிக்கை

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி விதிக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் விவசாய அமைச்சர்...