இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் ஐசிசி ஆடவர் ரி20 உலகக்கிண்ண தொடரின் முதல் சுற்றுக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.