நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு இலவச PCR பரிசோதனை

778

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கட்டணம் அறவிடாது இலவசமாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துள்ள பணியாளர்களுக்கு மாத்திரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தொழிலாளர் நலன்புரி நிதியத்தினூடாக பி.சி.ஆர் பரிசோதனைக்கான கட்டணத்தை ஒதுக்குமாறு துறைசார் அமைச்சு, பணியகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்த நிலையில், இந்த பரிசோதனைகளுக்காக சுற்றுலா பயணிகளிடமிருந்து கட்டணமாக 40 டொலர் அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது.

மேலும், 3 மணித்தியாலங்களில் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை வழங்கும் வகையில் அண்மையில் மத்திய நிலையம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here