புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக்கும் அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்கப் போவதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
புகையிரத பாதைகளை அமைப்பதற்கான எந்தவொரு வேலைத்திட்டத்தையும் அமைச்சர் முன்வைக்கவில்லை எனவும், போக்குவரத்து சபையை அழித்தது போன்று புகையிரதத்தையும் அழிக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர்கள் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ரயில்வே ஆணையம் அறிவிக்கப்பட்டால், மறுநாள் முதல் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் அவர்கள் தங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.