இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கான புதிய உத்தியோகபூர்வ சபையை தெரிவு செய்வதற்காக நடைபெறவுள்ள தேர்தலுக்கான தேர்தல் குழுவை பெயரிட இலங்கை கிரிக்கெட் நிர்வாக குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி திருமதி மாலானி குணரத்ன,
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி திருமதி ஷிரோமி பெரேரா, இந்த குழுவிற்கு இலங்கை நிர்வாக சேவையின் ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரியான திரு.சுனில் சிறிசேனா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் உத்தியோகபூர்வ தேர்தல் அடுத்த வருடம் மே மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.