சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

225

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில், சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி, 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

ஐ.பி.எல் தொடரின் 40 ஆவது போட்டியாக, டுபாயில் நேற்றிரவு இந்தப் போட்டி இடம்பெற்றது.

போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, 20 ஓவர்களில், 5 விக்கெட்டுக்களை இழந்து, 164 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 165 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி, 18.3 ஓவர்களில், 3 விக்கெட்டுக்களை இழந்த நிலையில், 167 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here