சீதாவின் ஒடிஸி இன்று அதன் முதல் பயணத்தினை ஆரம்பித்தது

746

சீதாவக்க – அவிசாவளையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் நோக்கில், சீதாவக்க ஒடிஸி ரயில் இன்று காலை தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ளது.

போக்குவரத்து, ஊடகம் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இன்று காலை 7.30 மணியளவில் கொழும்பு கோட்டையில் இருந்து பயணத்தை ஆரம்பித்த புகையிரதம் வாக் ரயில் நிலையம் வரை பயணிக்கவுள்ளது.

சீதாவக்க – அவிசாவளை சுற்றுலா வலயத்தில் தற்போதுள்ள சுற்றுலாத் தலங்களை மையமாகக் கொண்டு இந்த ரயில் இயக்கப்படும் என்றும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இது ஒரு அடிப்படை நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here