follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுபாடசாலை விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே 'உறுதிப்படுத்தல் கடிதம்' வழங்கப்படும்

பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ‘உறுதிப்படுத்தல் கடிதம்’ வழங்கப்படும்

Published on

அடையாள அட்டைக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கைக்கான அட்டைகளை வழங்குவதற்கும், இறக்குமதி செய்யப்பட்ட அட்டைகளை நிர்வகிப்பதற்கான உத்தியாக தேசிய அடையாள அட்டை ‘உறுதிப்படுத்தல் கடிதம்’ வழங்குவதற்கும் போதுமான அட்டைகள் கையிருப்பில் உள்ளதாக ஆட்கள் பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார்.

தேசிய அடையாள அட்டைக்காக தற்போது சுமார் ஒரு இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவிற்கு அடையாள அட்டை வழங்குவதற்கு போதுமான 5 இலட்சத்திற்கும் அதிகமான அட்டைகள் திணைக்களத்திடம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 4 இலட்சம் பாடசாலை விண்ணப்பதாரர்கள் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்பதாகவும், அந்த விண்ணப்பங்களில் உள்ள குறைபாடுகள் காரணமாக, அந்த தேசிய அடையாள அட்டைகளில் சுமார் 10 வீதமானவை மீள்பதிவு செய்ய அனுப்பப்படுவதாகவும் ஆட்கள் பதிவு ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

முதற்கட்டமாக பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கு அட்டைகள் வழங்கப்பட்டால் அட்டைகள் வீணாகும் எனவே பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் உறுதிப்படுத்தல் கடிதத்தில் தேசிய அடையாள அட்டை போன்ற புகைப்படம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, திணைக்களங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களுக்கும் சமர்ப்பிக்கும் திறன் உள்ளதாகவும், அந்த நிறுவனங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் குறித்த கடிதம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

செலவுகளை நிர்வகிப்பதற்கு, 2018 முதல் பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கு ‘உறுதிப்படுத்தல் கடிதம்’ வழங்கும் உத்தி பின்பற்றப்படும் என்றும், 2004ல் பிறந்த பிள்ளைகளின் அடையாள அட்டைகள் தற்போது அச்சிடப்பட்டும், 2005 இல் பிறந்த பிள்ளைகளின் அடையாள அட்டைகள் அச்சிட தொடங்கப்பட்டும் உள்ளதாக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்...