follow the truth

follow the truth

May, 14, 2024
Homeஉள்நாடுபிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

Published on

5 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கமைய அவசர தேவைகளைக் கருத்திற் கொண்டு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பாக செயற்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் யு.பீ.ஏ.கே.பீ.கருணாநாயக்க மேல் மாகாண போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பாகக் காணப்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜீ.ஐ.டீ.ஆர விஜேசிங்க , காலி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிபொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் எல்.ஏ.யு.சரத் குமார , மேல் மாகாண குற்றப்பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மப அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண குற்றப்பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் டபிள்யு.கே.ஜே.ஆர்.டயஸ் , சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவிற்கான பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காலி மாவட்டத்திற்கு பொறுப்பாக பணியாற்றிய பிரதி பொலிஸ்மா அதிபர் ஏ.எல்.யு.என்.பீ.லியனகே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டில் விவசாயத்தை முக்கிய ஏற்றுமதி துறையாக மாற்ற வேண்டும்

பாரம்பரிய பெருந்தோட்டக் கைத்தொழிலுக்குப் பதிலாக புதிய விவசாய வர்த்தகத் துறையொன்றை நாட்டில் உருவாக்கி, நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி...

கொழும்பில் கடும் வாகன நெரிசல்

கடும் மழை காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக் தெரிவிக்கப்படுகின்றன. பாராளுமன்ற வீதி, காசல் வைத்தியசாலை,...

LTTE மீதான தடையை நீடித்தது இந்தியா

LTTE அமைப்பு மீது காணப்படும் தடையை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மக்கள் மத்தியில் பிரிவினைவாத...