வாக்குச் சீட்டுக்களை அச்சடிக்க 30 நாட்கள் தேவை

395

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள அனைத்து அச்சுப் பணிகளையும் 30 நாட்களுக்குள் முடிக்க முடியும் என அரச அச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேவையான பணத்தைப் பெறுவதும் அவசியமானது என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

இதன் மூலம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளுக்காக அரச அச்சகத்திற்கு வழங்கப்பட்ட தொகை 40 மில்லியன் ரூபாவாகும். எவ்வாறாயினும், அச்சகம் ஏற்கனவே கிட்டத்தட்ட 150 மில்லியன் ரூபா பெறுமதியான அச்சுப் பணிகளை நிறைவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுவரை 75 சதவீத தபால் வாக்குச் சீட்டுக்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் 20 மில்லியன் ரூபா வழங்கினால் எஞ்சிய அச்சுப் பணிகளை ஆரம்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை அச்சிடும் பணியாளர்கள் தினசரி 12 மணித்தியால ஷிப்ட் வேலை செய்து முடிக்க முடியும் என்றும் எவ்வாறாயினும், இதற்கு முன்னர் அச்சிடப்பட்டுள்ள அனைத்து தபால் மூல வாக்கு சீட்டுகளையும் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமெனவும், அதற்கு 07 நாட்கள் தேவைப்படும் எனவும் மேலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here