ஜப்பான் பிரதமர் உக்ரைனுக்கு விஜயம்

407

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்க உள்ளார்.

அதன்படி, ஜப்பானிய பிரதமரின் இந்திய விஜயத்தின் பின்னர், இன்று (22) போலந்து வந்தடைந்த அவர், புகையிரதத்தில் உக்ரைன் நோக்கிப் புறப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு G7 நாடுகளின் தலைவர்கள் அனைவரும் உக்ரைனுக்கு விஜயம் செய்திருந்தனர், ஆனால் ஜப்பானிய தலைவர் மட்டும் உக்ரைனுக்கு விஜயம் செய்யவில்லை.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பானிய பிரதமர் ஒருவர் தீவிரமான போர் வலயத்திற்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

மேலும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தற்போது ரஷ்யா சென்றுள்ள நிலையில், அவர் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து உக்ரைன் நெருக்கடி குறித்து விவாதித்ததாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here