இந்தியா முழுவதும் 2,000 ரூபாய் தாள்களை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி இன்று உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம், அந்த ரூபாய் தாள் செப்டம்பர் 30ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் இதற்கு முன்பு அனைத்து ₹500 மற்றும் ₹1000 ரூபாய் தாள்களின் சட்டபூர்வ வழங்கல் நிலையை ரிசர்வ் வங்கி 2016ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றது.
இந்த நடைமுறையை ஒரு செய்திக்குறிப்பு மூலம் விவரித்துள்ள ரிசர்வ் வங்கி, மற்ற ரூபாய் மதிப்பு தாள்கள் போதுமான அளவில் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், ₹2000 தாள்களை அறிமுகப்படுத்தும் நோக்கம் நிறைவேறியது. அதன் பிறகு 2018-19இல் ரூபாய் இரண்டாயிரம் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.